Wednesday, 24 April 2013

பனாரசி ஆலூ சப்ஜி (Banarazi Aloo Sabzi)

பனாரசி ஆலூ சப்ஜி 





               தேவையான  பொருட்கள் 


  • சின்ன உருளை கிழங்கு -20
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • கரம் மசாலா பொடி -1/2ஸ்பூன் 
  • மிளகாய் பொடி -1/4ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • சக்கரை -1/2ஸ்பூன் 
  • மில்க் கிரீம் -2ஸ்பூன் (தேவையானால் )
  • கஸ்துரி மேத்தி இழை -1/2ஸ்பூன் 
  • நெய் -2ஸ்பூன் 
  • ஆயில்- 2ஸ்பூன் 

அரைக்க தேவையான பொருட்கள் 


  • வெங்காயம் -2(பெரியது )
  • முந்திரி -6
  • பச்சை மிளகாய் -1
  • வர மிளகாய் -2
  • மிளகு -5
  • சீரகம் -1/4ஸ்பூன் 
  • சோம்பு -1/4ஸ்பூன் 
  • பூண்டு -4
  • இஞ்சி -ஒரு சிறிய துண்டு  


செய்முறை 

                  தக்காளியை  கொதிக்கும்  தண்ணீரில்  20 நிமிடங்கள்  போட்டு  மூடி  வைக்கவும்.பின்  தக்காளியை  மிக்ஸ்யில்  போட்டு  அரைத்து  கொள்ளவும் .





                 உருளை கிழங்கை  குக்கரில்  வேக வைத்து  தோல் உரித்து கொள்ளவும். 
அரைக்க  கொடுத்துள்ள  பொருட்களை  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும். 

அடுப்பில்  கடாயை  வைத்து ஆயில்  விட்டு வேக  வைத்துள்ள  உருலைகிழங்கை போட்டு  10 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்.

 பின் அதை  தனியாக  ஒரு  தட்டில்  வைக்கவும்.அதே  கடாயில் நெய்  விட்டு அரைத்த  விழுதை  போட்டு  5 நிமிடங்கள்  வதக்கிய  பிறகு  அரைத்த  தக்காளி  விழுதை  சேர்த்து  மேலும்  15 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்.


 தேவையானால்  தண்ணீர்  1/2 கப்  சேர்த்து  கொதிக்க  வைக்கவும்.பிறகு  மஞ்சள்  பொடி,மிளகாய் பொடி,சக்கரை ,உப்பு ,கரம் மசாலா பொடி, சேர்த்து  15 நிமிடங்கள்  கொதித்த  பின் 

 வதக்கி  வைத்துள்ள  உருளையை  சேர்த்து  கஸ்துரி  மேத்தி  இழை  சேர்த்து  கொத்தமல்லி தழை  தூவி  இறக்கி  வைத்து  மில்க் க்ரீமை  விட்டு  பரிமாறவும்.



பின்  குறிப்பி 

1.ஆலு  க்ரேவி - புல்கா ,சப்பாத்தி ,புலாவ்  இவை  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம்.
       



Tuesday, 23 April 2013

கார்ன் புலாவ் ( CORN PULAO)

கார்ன்  புலாவ்   



                    

தேவையான பொருட்கள் 


  • பாஸ்மதி ரைஸ் -2கப் 
  • frozen corn-1கப் 
  • தேங்காய் பால் -1/2கப் 
  • தண்ணீர் -2கப் 
  • இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன் 

 அரைக்க  தேவையான  பொருட்கள் 


  • பூண்டு -5
  • மிளகு -7
  • பட்டை -1/2பீஸ் 
  • முந்திரி -5
  •  பச்சை மிளகாய் -3

தாளிக்க  தேவையான பொருட்கள் 


  •   ஆயில்,நெய் -3ஸ்பூன் 
  •   பட்டை இழை -1/2
   

செய்முறை 

      அரைக்க  கொடுத்துள்ளதை  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும்.
அரிசியை  20 நிமிடங்கள்  ஊறவைத்து  கொள்ளவும்.
கடாய் அல்லது  குக்கரில்  ஆயில்  விட்டு  தாளித்து  கொட்டவும்
.பின்  அரைத்த  விழுது,இஞ்சி  பூண்டு  விழுது,சேர்த்து  5 நிமிடங்கள்  வதக்கி  கொள்ளவும்

. பிறகு  கார்ன் சேர்த்து  மேலும்  5 நிமிடங்கள்  வதக்கிய  பின் ஊர  வைத்துள்ள  அரிசியை  சேர்த்து  2 நிமிடங்கள்  வதக்கவும்

.பின்   தேங்காய் பால்,தண்ணீர் ,உப்பு  சேர்த்து  2 நிமிடங்கள்  கொதித்த  பிறகு  25 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்





.பின்  கொத்தமல்லி  தழை  தூவி  பரிமாறவும்.

Saturday, 6 April 2013

நெல்லிக்காய் தொக்கு ( GOOSEBERRY THOKKU)


நெல்லிக்காய்  தொக்கு 


            தேவையான பொருட்கள் 

  • நெல்லிக்காய் -7
  • வரமிளகாய் பொடி -4ஸ்பூன் 9விருப்பத்திற்கேற்ப )
  • பெருங்காய பொடி -1ஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • கறிவேப்பிலை -7
  • நல்லெண்ணெய் -3கரண்டி 
  • வெந்தயம் -2ஸ்பூன் 
  • மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  • கடுகு -1/2ஸ்பூன் 
  • சக்கரை -1/3ஸ்பூன் 

 செய்முறை 

          பாத்திரத்தில் 2 கப்  தண்ணீர்  விட்டு  அடுப்பில்  வைத்து  கொதிக்க விடவும்.
பின்  கொதிக்கும்  தண்ணீரில்,உப்பு ,  நெல்லிக்காயை  போட்டு  40 நிமிடங்கள்  மூடி  வைக்கவும்
.பிறகு  கடாயில்  1ஸ்பூன்  வெந்தயத்தை  போட்டு  சிவக்க  வறுத்து  மிக்ஸ்யில்  பொடி  செய்து  கொள்ளவும்
. ஊறிய  நெல்லிக்காயை  கொட்டை  எடுத்து  மிக்ஸ்யில்  போட்டு  கரகரப்பாக  அரைத்து  கொள்ளவும்
.பிறகு  கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு,கறிவேப்பிலை  மஞ்சள் பொடி,
பெருங்காய பொடி  சேர்த்து 



 அரைத்து  வைத்துள்ள  நெல்லிக்காய்  விழுதை  சேர்த்து 
 5 நிமிடங்கள்  கிளறவும்.பின்  வரமிளகாய் பொடி,சக்கரை,வெந்தய பொடி    போட்டு  மேலும்  20 நிமிடங்கள்  வதக்கி  இறக்கி  வைக்கவும்.

 நன்றாக  ஆறிய  பின்  ஒரு  பாட்டிலில்  போட்டு  வைத்து  கொள்ளவும் 

  பின்  குறிப்பு 

    நெல்லிக்காய்  தொக்கு -கை படாமல்  வைத்து  கொள்ளவும்.
    தண்ணீர்  சேர்க்க  வேண்டாம்.
  
                    

Friday, 5 April 2013

அவுல் கேசரி (AVAL KESARI)


அவுல்  கேசரி 





               தேவையான  பொருட்கள் 

  • அவுல் -1கப் (கட்டி அவுல் )
  • சக்கரை -11/2கப் 
  • நெய் -1/2கப் 
  • முந்திரி -7
  • ஏலாக்காய் பொடி -1 பின்ச் 
  • குங்கும பூ - 1பின்ச் 
  • தண்ணீர் -2கப் 
  • கேசரி கலர் -1பின்ச் 

 செய்முறை 

               ஒரு  கடாயில்  அவுலை  போட்டு  சிவக்க  வறுத்து  கொள்ளவும்
.வறுத்த அவுலை  மிக்ஸ்யில் போட்டு  பொடித்து கொள்ளவும்.
பின்  கடாயில்  தண்ணீர்  விட்டு
  அது  நன்றாக  கொதித்த  பிறகு   பொடித்த  அவுல்,குங்கும பூ ,கேசரி கலர் ,  சேர்த்து  கிளறி  10 நிமிடங்கள்  மூடி  வைக்கவும் 


.தேவையானால்  தண்ணீர்  சிறுது  சேர்த்து  கொள்ளவும் .பின்  அவுல்  வெந்த  பிறகு  சக்கரையை  சேர்த்து  கிளறி  நெய்யை  கொஞ்சகொஞ்சமாக  விட்டு  





கை  விடாமல்  20 நிமிடங்கள்  கிளறி  இறக்கி  வைத்து  நெயில்  முந்திரி  தாளித்து  பரிமாறவும் .




Thursday, 4 April 2013

ஆனியன் காப்சிகம் கிரேவி (SIMLA MIRCH KI SABZI)


 ஆனியன் காப்சிகம் கிரேவி (SIMLA MIRCH KI SABZI)


                   தேவையான  பொருட்கள் 

  • காப்சிகம் -2
  • வெங்காயம் -2
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் -1
  • வரமிளகாய் பொடி -2ஸ்பூன் 
  • இஞ்சி விழுது -1ஸ்பூன் 
  • ஆயில் -3ஸ்பூன் 
  • சீரகம் -1/3ஸ்பூன் 
  • காய்ந்த வெந்தய கீரை -2ஸ்பூன்  
  • கறிவேப்பிலை -7
  • உப்பு -தேவையான அளவு 

        வறுத்து  பொடிக்க  தேவையான பொருட்கள் 

  • நிலகடலை -1ஸ்பூன் 
  • தனியா -1/2ஸ்பூன் 
  • சீரகம் -1/2ஸ்பூன் 
  • தேங்காய் துருவல் -11/2ஸ்பூன் 
  • வெள்ளை எள்ளு -1/2ஸ்பூன் 
  • ஆயில் -1ஸ்பூன் 

செய்முறை 

                 முதலில் வறுக்க  வேண்டிய  பொருட்களை  ஆயில்  விட்டு  வறுத்து  மிக்ஸ்யில்  பொடித்து  கொள்ளவும் 
. பின்   காப்சிகம் ,வெங்காயம் ,தக்காளி  ஆகியவற்றை  சதுர  சதுரமாக  வெட்டி  கொள்ளவும் 


.பிறகு  கடாயில்  ஆயில்  விட்டு  காப்சிகம் ,வெங்காயம் இரண்டையும்  தனித்தனியாக  வதக்கி   ஒரு  தட்டில்  போட்டு  கொள்ளவும் 

.அதே  கடாயில்  ஆயில்  விட்டு  சீரகம்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய்  தாளித்து  இஞ்சி  விழுது  சேர்த்து  1 நிமிடம்  வதக்கி கொள்ளவும்

.பிறகு  தக்காளியை  சேர்த்து  2 நிமிடங்கள்  வதக்கவும்.
தக்காளி  வதங்கிய  பிறகு  மிளகாய் பொடி,  சேர்த்து1நிமிடம்   வதக்கவும்.பின்  
பொடித்த  பொடி சேர்த்து
  தண்ணீர்  1கப்  விட்டு  காய்ந்த  வெந்தய கீரையை  சேர்த்து  1 நிமிடம்  மூடி  வைக்கவும் 
.பின்   வதக்கி  வைத்துள்ள  காப்சிகம், வெங்காய,ம் உப்பு    சேர்த்து  2 நிமிடம்  கொதிக்க  வைத்து
  இறக்கி  வைத்து  பரிமாறவும்.


பின்  குறிப்பு 

 1.காப்சிகம் ,வெங்காயத்தை  சேர்த்து  2 நிமிடங்களுக்கு  மேல்  கொதிக்க வைக்க  கூடாது .
2.  காப்சிகம்கிரேவி - சப்பாத்தி ,புல்கா,ரொட்டி  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம் .