Thursday, 4 April 2013

ஆனியன் காப்சிகம் கிரேவி (SIMLA MIRCH KI SABZI)


 ஆனியன் காப்சிகம் கிரேவி (SIMLA MIRCH KI SABZI)


                   தேவையான  பொருட்கள் 

  • காப்சிகம் -2
  • வெங்காயம் -2
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் -1
  • வரமிளகாய் பொடி -2ஸ்பூன் 
  • இஞ்சி விழுது -1ஸ்பூன் 
  • ஆயில் -3ஸ்பூன் 
  • சீரகம் -1/3ஸ்பூன் 
  • காய்ந்த வெந்தய கீரை -2ஸ்பூன்  
  • கறிவேப்பிலை -7
  • உப்பு -தேவையான அளவு 

        வறுத்து  பொடிக்க  தேவையான பொருட்கள் 

  • நிலகடலை -1ஸ்பூன் 
  • தனியா -1/2ஸ்பூன் 
  • சீரகம் -1/2ஸ்பூன் 
  • தேங்காய் துருவல் -11/2ஸ்பூன் 
  • வெள்ளை எள்ளு -1/2ஸ்பூன் 
  • ஆயில் -1ஸ்பூன் 

செய்முறை 

                 முதலில் வறுக்க  வேண்டிய  பொருட்களை  ஆயில்  விட்டு  வறுத்து  மிக்ஸ்யில்  பொடித்து  கொள்ளவும் 
. பின்   காப்சிகம் ,வெங்காயம் ,தக்காளி  ஆகியவற்றை  சதுர  சதுரமாக  வெட்டி  கொள்ளவும் 


.பிறகு  கடாயில்  ஆயில்  விட்டு  காப்சிகம் ,வெங்காயம் இரண்டையும்  தனித்தனியாக  வதக்கி   ஒரு  தட்டில்  போட்டு  கொள்ளவும் 

.அதே  கடாயில்  ஆயில்  விட்டு  சீரகம்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய்  தாளித்து  இஞ்சி  விழுது  சேர்த்து  1 நிமிடம்  வதக்கி கொள்ளவும்

.பிறகு  தக்காளியை  சேர்த்து  2 நிமிடங்கள்  வதக்கவும்.
தக்காளி  வதங்கிய  பிறகு  மிளகாய் பொடி,  சேர்த்து1நிமிடம்   வதக்கவும்.பின்  
பொடித்த  பொடி சேர்த்து
  தண்ணீர்  1கப்  விட்டு  காய்ந்த  வெந்தய கீரையை  சேர்த்து  1 நிமிடம்  மூடி  வைக்கவும் 
.பின்   வதக்கி  வைத்துள்ள  காப்சிகம், வெங்காய,ம் உப்பு    சேர்த்து  2 நிமிடம்  கொதிக்க  வைத்து
  இறக்கி  வைத்து  பரிமாறவும்.


பின்  குறிப்பு 

 1.காப்சிகம் ,வெங்காயத்தை  சேர்த்து  2 நிமிடங்களுக்கு  மேல்  கொதிக்க வைக்க  கூடாது .
2.  காப்சிகம்கிரேவி - சப்பாத்தி ,புல்கா,ரொட்டி  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம் .

No comments:

Post a Comment