ஸ்ரீ சனீஸ்வர் பகவான் பெருமை
சனி என்ற பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும், கால நேரம் என்பது இவருக்கு கட்டுப்பட்டது. இவர் கண்ணசைவு இல்லாமல் காலன் கூட தன் கடமையை செய்ய முடியாது. ஆரோக்கியம், அழகு, சிறந்த குணம், உடல் வலிமை, பேச்சாற்றல், வியாபார வெற்றி, கல்வி, திரு மணம், மக்கட் பேறு, புகழ், சுகபோகம், இராஜயோகம் மற்றும் நல்ல ஞானம். இவ்வாறு அனைத்தையும் நவக்கிரக வழிபாட்டின் மூலம் பெற முடியும். ஆனால் இவை அனைத்தையும் அனுபவிக்க ஆயுள் வேண்டுமே. அந்த ஆயுளை ஒருவரின் ஜாதகத்தில் ஸ்ரீசனிபகவானை கொண்டே நிர்ணயிக்க முடியும். சனியை போன்று கொடுப்பானும்
இல்லை கெடுப்பவனும் இல்லை.
ஸ்ரீ சனீஸ்வர் பகவானுக்கு உரிய பரிகாரங்கள்
1. சுத்தமான எள்ளை துணியில் கட்டி திரியாக்கி நல்லெண்ணெயில் திலதீபமாக ஏற்றுதல்.
2. காக்கைக்கு எள் அன்னம் போடுதல், தினமும் சநிஹோரையில் தரிசனம் செய்வது நல்லது.
3. சனிக்கிழமைகளில் உபவாளசம் விரதம் இருத்தல் அல்லது மதிய உணவோடு இருத்தல்.
4. ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஸ்தோத் திரங்கள், மந்திரங்கள், கோளறு பதிகம், தசரதக்ரதசனைச்சர ஸ்தோத்திரித்தை முடிந்தவரை தினமும் ஜபித்தல் நன் மை பயக்கும்.
5. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கம்போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம்.
6. சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் அபி ஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி எள்ளு சாதம் வடைமாலை சாற்றி வன்னி கரு ங்குவலை மலர் சாற்றி வழிபடலாம்.
எள்ளுசாதம்
தேவையான பொருட்கள்
- கருப்பு எள்ளு -1/2கப்
- கடலை பருப்பு -1ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -2ஸ்பூன்
- கறிவேப்பிலை -4
- வரமிளகாய் -3
- நல்லெண்ணெய் -4ஸ்பூன்
- கடுகு -1/4ஸ்பூன்
செய்முறை
எள்ளை தண்ணீரில் நன்றாக கழுவி வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வடித்து வைத்துள்ள எள்ளை போட்டு 2 நிமிடம் வறுத்த பிறகு கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு ,வரமிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்
. வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு மிக்ஸ்யில் போட்டு பொடித்து கொள்ளவும்
.மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,கறிவேப்பிலை தாளித்து பொடித்த பொடியை போட்டு இறக்கி வைக்கவும்
.பின் வடித்த சாதத்துடன் கலந்து பரிமாறவும்.