Sunday, 3 February 2013

நெல்லிக்காய் பச்சடி ( Gooseberry/Amla/Nellikkai butter milk gravy)


நெல்லிக்காய்  பச்சடி (Gooseberry/ Amla /Nellikkai pachadi)





                    தேவையான  பொருட்கள் 

  •   நெல்லிக்காய் -3
  •   தேங்காய் துருவல் -1/2கப் 
  •   பச்சை மிளகாய் -3
  •   மோர் -1/2கப் (கடைந்த கட்டியான  மோர் )
  •   உப்பு -தேவையான  அளவு 

அரைக்க  தேவையான  பொருட்கள் 

  •  தேங்காய் துருவல் -1/2கப் 
  •   பச்சை மிளகாய் -3
  •    வேக வைத்த நெல்லிக்காய் 

தாளிக்க  தேவையான  பொருட்கள் 

  • தேங்காய் எண்ணெய் -1ஸ்பூன் 
  •  கடுகு -1/2ஸ்பூன் 
  •  வெந்தயம் -3/4ஸ்பூன் 
  •  கறிவேப்பிலை -5இதழ்கள் 

செய்முறை 

               நெல்லிக்காயை  வேக வைத்து  கொட்டையை  எடுத்து  கொள்ளவும் .

    பிறகு வேக வைத்த நெல்லிகாயுடன்  அரைக்க  கொடுக்கப்பட்டுள்ள  பொருட்களுடன்  சேர்த்து  மிக்ஸ்யில்  போட்டு  அரைக்கவும்



 .பின் உப்பு  சேர்த்து   மோரை  விடவும் .பிறகு  தேங்காய் எண்ணெயில்  கடுகு ,வெந்தயம் ,கறிவேப்பிலை  தாளித்து  கொட்டவும் .

பின்  குறிப்பு 

 நெல்லிக்காய்  பச்சடி - கீரை  மசியல் ,பொரிச்ச கூட்டு ,மோர் குழம்பு ,இவை  அனைத்துக்கும்  தொட்டு  கொள்ளலாம் 

No comments:

Post a Comment