Sunday, 3 February 2013

பூசணிகாய் முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு

பூசணிகாய் முருங்கைக்காய்   பொரிச்ச கூட்டு (Ash gaurd, drumstick gravy)





     தேவையான  பொருட்கள் 


  •  பூசணிகாய் - 250
  •  முருங்கை காய் -2
  •  துவரம்பருப்பு -1/2கப் 
  •  மஞ்சள் பொடி -1/2ஸ்பூன் 
  •  உப்பு -தேவையான அளவு 
  • கறிவேப்பிலை -5இதழ்கள் 

  அரைக்க  தேவையான பொருட்கள்       


  •  தேங்காய் -1/2கப் 
  •  வற்றல் மிளகாய் -3-4
  •  சீரகம் -1/2ஸ்பூன்   

 தாளிக்க  தேவையான  பொருட்கள் 


  •   தேங்காய்  எண்ணெய் -1/2ஸ்பூன் 
  •    கடுகு -1/2ஸ்பூன் 
  •    உளுத்தம் பருப்பு -1/2ஸ்பூன் 
  •    கறிவேப்பிலை -3இதழ்கள் 

 செய்முறை 

           பூசணிக்காய்,முருங்கைக்காய்  இரண்டையும்  மஞ்சள்பொடி ,உப்பு  ,கறிவேப்பிலை,தண்ணீர் 3-4 டம்ளர்  விட்டு   வேக வைத்து  கொள்ளவும்







.பருப்பை  குக்கரில் குழைய  வேகவைக்கவும். வெந்த  காய்யுடன்  பருப்பை  போட்டு 5 நிமிடங்கள்  கொதிக்க  வைக்கவும்.



 பிறகு  அரைத்த  பொருட்களை  சேர்த்து  10 நிமிடங்கள்  கொதித்த  பின்
  இறக்கி  வைக்கவும்.பின்  தேங்காய் எண்ணெயில்  கடுகு ,உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை  தாளித்து  கொட்டவும்.

No comments:

Post a Comment