தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி - 1 கப்
- பச்சரிசி - 1/2 கப்
- துவரம் பருப்பு - 1/2 கப்
- உளுந்து - 1/4 கப்
- கடலை பருப்பு - 1/4 கப்
- பெருங்காயம் -1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 10 இதழ்கள்
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- வரமிளகாய் - 4
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி - ஒரு துண்டு
- தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 2 - 3 (பொடியாக நறுக்கியது )
செய்முறை
அரிசி , பருப்பு ,மிளகாய் ,மிளகாய் வற்றல் , இவை அனைத்தையும் 2-4 மணி நேரம் ஊற வைத்து,உப்பு , இஞ்சி , தேங்காய் , கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்து மாவை 4 மணிநேரம் வைத்து ,பொடியாக நறுக்கிய வெங்காயம் , கொத்தமல்லி சேர்த்து தோசை கல்லில் சுட்டு எடுக்கவும் .
பின் குறிப்பு
இதற்கு தொட்டு கொள்ள அவியல் , வெல்லம் ஏற்றதாக இருக்கும் .
No comments:
Post a Comment