தேவையான பொருட்கள்
- புளி - - எலும்பிச்சை பழ அளவு
- நல்லெண்ணெய் - 3 கரண்டி
- கடுகு - - 1 ஸ்பூன்
- வெந்தயம் - ½ ஸ்பூன்
- வற்றல் மிளகாய் - - 3
- மஞ்சள் பொடி - - ½ ஸ்பூன்
- பெருங்காயம் - - ½ ஸ்பூன்
- வெல்லம் - - சிறிதளவு
- உப்பு - - தேவையான அளவு
- கறிவேப்பிலை - - 5 இதழ்கள்
தனியாக வறுத்து பொடிக்க
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 ஸ்பூன்
- வற்றல் மிளகாய் -4
- தனியா - 1/12 ஸ்பூன் (கொத்தமல்லிவரை )
கடைசியில் வறுத்து சேர்க்க தேவையான பொருட்கள்
நிலக்கடலை - 3 ஸ்பூன்
முந்திரி - 8-10
கறிவேப்பிலை - 5 இதழ்கள்
கடலைபருப்பு - ½ ஸ்பூன்
தனியாக வறுத்து பொடிக்க
எள்ளு - 1½ tsp (கருப்பு எள்ளு )
செய்முறை
புளியை 1/2 மணி நேரம் ஊற வைத்து புளி கரைசலை கட்டியாக பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும் ,
கடாயில் எண்ணெய் விட்டு முதலில் மஞ்சள் பொடி , பெருங்காயம் சேர்த்து அதில் கடுகு , உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
புளி கரைசலை விட்டு உப்பு ,சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்,
பிறகு வெந்தயத்தையும்,வெல்லத்தையும் அதில் சேர்க்கவும் .20 நிமிடங்கள் கொதித்த பின் ,
உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு , வற்றல் மிளகாய் ,தனியா இவற்றை தனியாக ஒரு கடாயில் வறுத்து பொடித்து கொதிக்கும் புளி கரைசளுடன் சேர்த்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
புளி கரைசல் கெட்டியாக ஆனவுடன், இறக்கி வைக்கவும் . பிறகு அதில் நிலகடலை , முந்திரி , கடலை பருப்பு ,கறிவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து கிளறவும்,
இந்த புளி காய்ச்சலில் வடித்து வைத்த சாதத்தை கலந்த பிறகு
எள்ளை வறுத்து பொடித்து சேர்க்கவும் .
புளி காய்ச்சலை 10 நாட்கள் வரை refrigerator லில் வைத்து உபயோகபடுத்தலாம், தேவையான போது சாதத்தை கலந்து பரிமாறலாம். இதற்கு தொட்டு கொள்ள வடகம் ,அப்பளம் , தயிர் போன்றவை ருசியாக இருக்கும்.
No comments:
Post a Comment