Wednesday, 9 January 2013

திருநெல்வேலி மோர் குழம்பு (MORE KUZHAMBU) butter milk gravy

திருநெல்வேலி  மோர் குழம்பு 





               தேவையான  பொருட்கள் 

  •   சுண்டைக்காய்  வற்றல் - 5-8
  •  வெந்தயம் - 1/2 ஸ்பூன் 
  •  கடுகு - 1/2 ஸ்பூன் 
  •  கறிவேப்பிலை -5 இதழ்கள் 
  •  கடைந்த மோர் - 2கப் 
  • உப்பு - தேவையான அளவு 

வறுத்து  அரைக்க  தேவையான  பொருட்கள் 
  •  உளுத்தம்பருப்பு  -1ஸ்பூன் 
  •  கடலை பருப்பு -1/2ஸ்பூன் 
  •  வற்றல் மிளகாய்  - 6-7
  • கறிவேப்பிலை - 8 இதழ்கள் 
  • தேங்காய் துருவல் -1/2 கப் (வறுக்க வேண்டாம் )
 செய்முறை 

 வறுத்து  அரைக்கவேண்டிய பொருட்களை  தேங்காய்  சேர்த்து  அரைத்து  கொள்ளவும் ,


ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு   கடுகு , வெந்தயம் ,கறிவேப்பிலை  தாளித்து  அதில்  சுண்டைக்காய் வற்றலை  சேர்த்து  ஒரு நிமிடம்  வதக்கி பின்  அரைத்த  விழுதை  சேர்த்து   2  நிமிடங்கள் வதக்கவும் 




   பின்னர்  மோர் , உப்பு  சேர்த்து   அது  நுரைத்து  வரும்போது அடுப்பை அணைத்து  இறக்கவும் .

           
 பின் குறிப்பு 
                 அரைக்கும்  பொருட்களை  தண்ணீர்  விட்டு  அரைக்கவும் .
                 இதற்கு  தொட்டு கொள்ள  கீரை  மசியல், சுட்ட அப்பளம்  நன்றாக இருக்கும் .

No comments:

Post a Comment