அவியல் செய்முறை
தேவையான பொருட்கள்
- பூசணிக்காய் - 1/4 கிலோ
- பரங்கிக்காய் - 100 கிராம்
- முருங்கைக்காய் - இரண்டு
- கேரட் - இரண்டு
- பீன்ஸ் - 100கிராம்
- மாங்காய் - 4- 5 பீஸ் (தேவையானால் )
- சேனை கிழங்கு - 100கிராம்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - ஒரு கரண்டி
- தயிர் - 3 கரண்டி
- கறிவேப்பிலை - 10-12 இதழ்கள்
அரைக்க தேவையான பொருட்கள்
- தேங்காய் 1/2 கப்
- பச்சை மிளகாய் - 4-5 (விருப்பத்திற்கேற்ப காரம் போட்டு கொள்ளவும் )
செய்முறை
காய்கறிகளை நீள வாக்கில் நறுக்கி
வைத்து கொள்ளவும்,
ஒரு வாய்
அகன்ற பாத்திரத்தில் நறுக்கிய
காய்கறிகளை எல்லாம்
போட்டு அதில்
உப்பு, மஞ்சள்
பொடி , கறிவேப்பிலை போட்டு
குக்கரில் 4-5 விசில் வரும்
வரை வைத்து
இறக்கவும்,பிறகு அதில் அரைத்த
பொருட்களை போட்டு 10 நிமடங்கள்
அடுப்பில் வைத்து
கிளறி இறக்கி
வைத்து தேங்காய்
எண்ணெய் கறிவேப்பிலை போடவும்.ஆறிய
பிறகு தயிர்
விட்டு பரிமாறவும்
No comments:
Post a Comment