பாகற்காய் பற்றி அறிந்து கொள்வோம்
பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயைநீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.
100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.
இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை.இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.
பாவக்காய் பிட்லா
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - ஒரு கப்
- பாவக்காய் - இரண்டு சிறியது( அல்லது பச்சை தக்காளி )
- புளி - எலும்பிச்சை பழ அளவு
- மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - 2 கரண்டி
- கடலை பருப்பு - 11/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- வற்றல் மிளகாய் - ஐந்து
- தேங்காய் - 1/2 கப்(தனியாக பொன்னிறமாக வறுக்கவும் )
- கடுகு- 1/4 ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
புளியை இரண்டு டம்ளர் தண்ணிர் விட்டு
1/2 மணி நேரம்
ஊரா வைத்து கொள்ளவும்.
துவரம் பருப்பை கூக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
.ஒரு கடாயில்
கொஞ்சம் எண்ணை விட்டு
பாவக்காயை விதையை நீக்கி பொடியாக
நறுக்கி போட்டு ஒரு நிமிடம் நன்றாக வறுக்கவும்
.வறுத்த பாவக்கையை
புளி தண்ணீருடன் சேர்த்து அடுப்பில்
வைத்து உப்பு மஞ்சள் பொடி கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சுமார்
1/2 மணி கொதிக்க விடவும்
. பிறகு வேகவைத்த துவரம் பருப்பை போட்டு
கலக்கவும், பின்பு வறுத்து அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து நன்றாக
கொதிக்க வைத்து இறக்கி
வைக்கவும். கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
பின் குறிப்பு
பாவக்காய்க்கு பதில்
பச்சை தக்காளி
,கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்