Saturday, 29 December 2012

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அன்றாட சமையல். (cooking for a healthy life )


ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அன்றாட சமையல்.   (cooking for a healthy life )

ஆரோக்கியமான வாழ்க்கை வாழத்தான் நாம் அன்றாடம் உணவு உண்கிறோம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். வயிறு பசி ஆற மட்டும் உண்டால் போதும் என்ற வகையில் இன்றைய நாகரீகம் சென்று கொண்டிருக்கிறது, மேலும் உணவு என்பதும் அன்றாட கடமைகளில் ஒன்றாகவே பார்க்கபடுகிறது. இது எத்தகைய ஒரு தீமை என்பது நமக்கு, காலம் கடந்து நோய்கள் வந்த பிறகே உணர்கிறோம். இன்றைய கால் சென்டர் கலாச்சாரத்தில் பிரேக் பாஸ்ட் என்பது (இருக்குமானால்) ஒரு பாக்கெட் சிப்ஸ் + ஒரு கோக்குடன் முடிந்து விடுகிறது. 

இப்போது எல்லாவற்றுக்கும் ‘ரெடிமேட்’ வந்துவிட்டது. குழம்பு பேஸ்ட், புளியோதரை மிக்ஸ், ரெடிமேட் இட்லி, தோசை, உப்புமா, புளியோதரை, எலுமிச்சை, வத்தக்குழம்புகூட ரெடிமேட் பேக்கில் விற்கப்படுகிறது. இவற்றைப் பதப்படுத்த நச்சு கலந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது நன்றாக தெரிந்தும் அவற்றை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. பழங்களையும் காய்கறிகளையும் முக்கியமாக பச்சை கீரை வகைகளையும் அன்றாட உணவுடன் சேர்க்கவேண்டிய அவசியத்தை மருத்துவ உலகம் பறைசாற்றிக்கொண்டு தான்  இருக்கிறது  இவற்றை தவிர்ப்பதால், நாமே நோய்களுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறோம். 

பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் அளவான தானிய வகைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் உபாதைகள், பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை  தவிர்த்து  பல ஆரோக்கியமான வழிவகைகளைப் பெறமுடியும். நம்மை சுற்றி உள்ள மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்களையும் அவற்றை வைத்து செய்யும் சமையலையும் தெரிந்து கொள்ளலாமே?

No comments:

Post a Comment