தஞ்சாவூர் ஸ்வீட் மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள்
- மாங்காய் -1(மூக்கு மாங்காய் )
- வெல்லம் -1/2கப் ( பொடித்த பாகு வெல்லம் )
- மஞ்சள் பொடி -1/2 ஸ்பூன்
- உப்பு - கொஞ்சம்
- தண்ணீர் -1கப்
தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில் -1ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- பச்சை மிளகாய் -2
செய்முறை
மாங்காவை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.
பின் குக்கரில் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்கவும்.பிறகு வெந்த மாங்காயை மசித்து வைத்து கொள்ளவும். பின் கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு கொதித்தவுடன் வெள்ளத்தை போடவும்
.வெள்ளம் கரைந்தவுடன் வடிகட்டி கடாயை அடுப்பில் வைத்து வெல்ல கரைசலை விட்டு 2 நிமிடங்கள் கொதித்தவுடன் மசித்து வைத்துள்ள மாங்காயை சேர்க்கவும்
.பின் உப்பு சிறிது சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும். தேவையானால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பிறகு தாளிக்க கொட்டி பரிமாறவும்
.
பின் குறிப்பு
இனிப்பு அதிகம் தேவையானால் வெல்லம் அதிகமாக சேர்த்து கொள்ளவும்.